சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் மட்டும் அல்லாமல் பூமியில் உயிர்வாழத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் உதிக்கும் சூரியனை நாம் சாதாரணமாகப் பார்த்துக் கடந்து விடுகிறோம். ஆனால் அதன் உள்ளே நடக்கும் இயற்கையின் விந்தையை நினைத்துப் பார்ப்பதில்லை.
சூரியன் உருவாக்கும் பேராற்றலின் ரகசியத்தைப் புரிந்துகொண்டு, அதே முறையில் பூமியில் சுத்தமான, அளவில்லாத மின்சாரத்தை உருவாக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். அந்த முயற்சிகளுக்குப் பொதுவாக ‘செயற்கைச் சூரியன்’ (Artificial Sun) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சீனா இந்த முயற்சியில் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதைப் புரிந்துகொள்ள, முதலில் சூரியனில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
















Add Comment