காலமும் கருவிகளும்
மேக், ஐபாட், ஐபேட், ஐஃபோன் இவையாவும் ஜாப்ஸ் இருந்தபோதே அறிமுகமானவை. குக் தலைமையேற்ற பின்னர் இக்கருவிகளில் அடுத்தடுத்த வெர்ஷன்கள் வந்தன.
‘புதிய கருவிகள் இல்லையா?’ என்னும் கேள்வி எப்போதும் இருந்தது. அதற்கான விடையாக வந்தது புதியதொரு ஆப்பிள் கருவி.
ஆப்பிள் வாட்ச்.
ஆப்பிள் ஏன் கடிகாரம் செய்யும் வேலையில் இறங்கவேண்டும்? அவர்களுடைய மார்க்கெட் வேறல்லவா? இப்படியான அடுக்கடுக்கான வினாக்கள்.
குக்கின் தனித்தன்மை சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண்பது. ஆப்பிள் வாட்சும் அந்த வரிசையில் வந்ததுதான்.
குக் ஒரு ஃபிட்னஸ் ஆர்வலர். உடல்நலனில் எப்போதும் அக்கறையாக இருப்பவர். அவர் போன்ற ஒருவரின் தலைமையில் இக்கருவி அறிமுகமானது இயல்பானதே.















Add Comment