எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் கவனம் பெற்றிருக்கின்றன. அதிலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள்.
இந்தத் தேர்தலின் விநோதத் தன்மையே இத்தனை கவனத்தையும் அவற்றுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தக் கணிப்புகளில் எதைக் கொண்டும் மக்களாலும் அரசியல் கட்சிகளாலும் அறுதியான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
ஒவ்வொரு கணிப்பும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் அமர்வதாகச் சொல்கின்றன. அவை ஒவ்வொன்றும், அதில் வெற்றி பெறப்போவதாகச் சொல்லப்படும் கட்சிகளால் உருவாக்கப்பட்ட கணிப்புகள் என்ற குற்றச்சாட்டையும் முழுதாக மறுத்துவிட முடியாது. நேர்மையாகச் செய்யப்படும் கணிப்புகளும் இருக்கலாம்.















Add Comment