Home » குழிக்குள் ஓதும் மந்திரம்
உணவு

குழிக்குள் ஓதும் மந்திரம்

குக்கர் பிரியாணி தொடங்கி விறகடுப்பு பிரியாணி, மூங்கில் பிரியாணி வரை சாப்பிட்டுப் பார்த்துள்ளோம். இதற்கெல்லாம் சவால் விடும் விதமாக, ‘என்னது, நீங்க இன்னும் மந்தி பிரியாணி சாப்பிட்டதில்லையா?’ எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள் ஜென் ஸீ உணவுப் பிரியர்கள். இது நமது ருசிஞர் படைக்கே வந்த அவமானம் என்று கருதி, அதைப் போக்கும் ஒரே நோக்கத்தோடு மந்தி பிரியாணி உண்ணச் சென்றோம்.

‘மந்தி பிரியாணியைச் சாதாரணமாகச் சமைக்க மாட்டார்கள். அதற்கென்றே ஏற்படுத்திய குழியில், சுற்றியுள்ள மணலின் சூட்டில் மட்டுமே அதை வேக வைப்பார்கள். இதனால் அதைக் குழி மந்தி என்றும் அழைப்பார்கள். எப்போதும் கேஸ், குக்கரில் மட்டுமே சமைக்கும் நீங்கள் இதை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’

ஆர்டர் செய்தபின் ஒரு திரில்லர் பட அளவுக்கு பில்ட்-அப் செய்தது ஜென் ஸீ கூட்டம். ஆறு மாதத்திலிருந்து வருடக்கணக்கில் மண்ணில் புதைந்திருக்கும் ஒயினைப் போன்ற அரபுலகப் பொக்கிஷம் இந்த மந்தி பிரியாணி என்றார்கள். சொல்வதற்கெல்லாம் ஆச்சரிய முகபாவத்துடன் பசியை மறைத்துக் காத்திருந்தேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!