ஜப்பானில் தொண்ணூறு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒட்டுமொத்த வீடுகளில் இது சுமார் பதிநான்கு சதவீதமாம். நீண்ட நாள்களாக காலியாக இருப்பதால் இவ்வீடுகளில் புதர் மண்டிக் காணப்படுகிறது. ஆதரவற்ற வீடுகள் என்பதாலோ என்னவோ விஷ ஜந்துக்களும் விலங்குகளும் இவ்வீடுகளுக்கு ஆதரவளித்துத் தங்கிவருகின்றன. இது அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இதுபோன்ற பாழடைந்த வீடுகளில் பேய்கள் வசிப்பதாக நம்புவோர் நம்மூரில் அதிகம். ஜப்பானியர்களும் இது போன்ற நம்பிக்கைக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் போல. அவர்களும் இவ்வீடுகளைப் பேய் வீடுகள் என்றே அழைக்கின்றனராம்.
கடந்த சில ஆண்டுகளாகப் புறநகர்ப் பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு ஜப்பானிய மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்துவந்தனர். இக்காரணத்தால் புறநகர்களில் பல வீடுகள் காலியாவது வாடிக்கையாக இருந்துவந்தது. இப்போது புதிய அச்சுறுத்தலாக, நகரங்களிலும் வீடுகள் காலியாவது அதிகரித்துள்ளது என்கின்றன தரவுகள். டோக்கியோ, கியோட்டோ போன்ற புகழ்பெற்ற ஜப்பானிய நகரங்களும் இதில் அடக்கம். காலியான வீடுகளை அக்கியா (Akiya) என்றழைக்கின்றனர் ஜப்பானியர்கள்.















Add Comment