தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் அன்புமணி அணியுடன் பதினொரு தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது ராமதாஸ் அணி. சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த மோதலைத் தொடர்ந்து தற்போது தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷன் வரை இந்தப் பஞ்சாயத்து சென்றபோது, விதிமுறைப்படி அன்புமணிக்குக் கட்சிப் பெயரையும், மாம்பழச் சின்னத்தையும் தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.
ராமதாஸ் அவருடைய பேரன்களில் ஒருவரான முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக அறிவித்தார். அங்கே தொடங்கியது அவருக்கும் அன்புமணிக்குமான கருத்து வேறுபாடு. அந்த மேடையிலேயே அன்புமணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ராமதாஸின் இரண்டாவது மனைவி சுசிலா விவகாரம் மோதலைப் பெரிதாக்கியது.
இதையடுத்து, நிறுவனர் என்கிற அதிகாரத்தில் ராமதாஸ் அன்புமணியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். அடுத்து யாருக்குக் கட்சி என்ற தகராறு ஏற்பட்டது. கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அதிகமாக இருந்ததால் அன்புமணி பாமகவைக் கைப்பற்றினார். சட்டமன்றத் தேர்தலுக்கும் தயாரானார்.















Add Comment