கலைஞர் திமுகவும் இந்திரா காங்கிரஸும்
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார் கருணாநிதி. அண்ணாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்திலிருந்த நெடுஞ்செழியனைப் பின்னுக்குத் தள்ளி, கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை வகித்தார். தனக்கென ஒரு கூட்டணியைக் கட்சிக்குள்ளேயே வளர்த்துக்கொண்டார். அந்தக் கூட்டணிதான் இரண்டு முறை பெரிய பிளவுகளைச் சந்தித்தபோதும் திமுக அவரிடமிருந்து பறிபோகாமல் காப்பாற்றியது.
தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்த பிறகு தேர்தல் களம் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான போட்டியாக இருந்தது. காங்கிரஸுக்குள் இந்திரா காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டபோது, கருணாநிதி இந்திரா காந்தி பக்கம் நின்றார். வி.வி. கிரியைக் குடியரசுத் தலைவராக்கியபோதும், இந்திரா காந்தி மீதான நாடாளுமன்ற அவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் இந்திரா காந்திக்கு ஆதரவு கொடுத்தார் கருணாநிதி.
















Add Comment