ஆப்பிள் நாகரிகம்
ஒரு டிரில்லியன் டாலர் என்னும் இலக்கை எட்டியது ஆப்பிள். குக் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பலன் இது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இரட்டிப்பாக, மும்மடங்காகப் பெருகியது.
பொருளாதாரம் என்னும் அளவுகோலில் ஆப்பிள் நம்பர் ஒன் நிறுவனம். ஆனால் எந்தவொரு நிறுவனத்தையும் மதிப்பிட பொருளாதாரத்தை மட்டுமே தனியொரு குறியீடாகக் கொள்ள இயலாது.
தகைசால் நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு நாகரிகத்தை உருவாக்குகின்றன. அதுவே அவர்களின் அடையாளமாக மாறிவிடுகிறது.
ஆப்பிளுக்கென அவ்வாறான ஒரு நாகரிகத்தை உருவாக்குவதில் டிம் ஆர்வம் காட்டினார். இது வெறுமனே மார்க்கெட்டிங் தந்திரமல்ல. பிம்பம் கட்டும் வேலையல்ல. உள்ளபடியே ஆப்பிளின் வளர்ச்சி அனைவரையும் சென்றடைய வேண்டும் என விரும்பினார் டிம் குக்.
இதற்கெனப் பல்வேறு பரிமாணங்களில் வேலை செய்தார் டிம்.
















Add Comment