பெருந்தொற்றும் பெருங்கனவும்
2020ஆம் ஆண்டு உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கியது. பாகுபாடில்லாமல் எங்கும் பரவிய கொரோனாவை ரஷ்யாவும் எதிர்கொண்டது. பிற நாடுகளிலிருந்து கொரோனா நுழைவதைத் தடுத்திருந்தாலும், ஏற்கெனவே இருப்பவர்களிடமிருந்து தொற்று பரவியது.
ஆரம்பத்தில் ரஷ்யாவின் பரிசோதனைக் கட்டமைப்புகள் குறைவாக இருந்தன. ஆனால் சில மாதங்களில் உலகிலேயே அதிக கொரோனா பரிசோதனைகளைச் செய்யும் நாடானது ரஷ்யா. படிப்படியாக லாக் டவுன்கள் அறிவிக்கப்பட்டன. பொருளாதாரத்தை விட மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
உலகிலேயே முதல் நாடாக கொரோனாவுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ரஷ்யா. ஸ்புட்னிக் V என்ற பெயரில் 2020 டிசம்பர் 07 முதல் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மருத்துவர்கள், ஆசிரியர்கள், நடுத்தர வயது மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.















Add Comment