இந்தியாவின் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக லாக்டோஸ் இல்லாத பால் பொருள்களின் உற்பத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இவ்வகை பால்பொருள்களின் நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது என்கின்றன சந்தை நிலவரங்கள். உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே...
Author - ரிஷி ரமணா
![]()
எழுத்தாளனாக இது என்னுடைய முதல் ஆண்டறிக்கை. அது ஒன்றே இந்த நிமிடத்தில் நான் மகிழ்ந்திருக்கப் போதுமானதாக இருக்கிறது. இந்த ஆண்டில் நான் புதிதாகப் பிறந்தேன் என்றுகூடச் சொல்லலாம். ‘மெட்ராஸ் பேப்பர்ல எழுதுங்க’ என்று ஆசிரியர் பாரா சொன்ன நாள்முதல் என் அன்றாடங்கள் நிறம் மாறின. ஓராண்டில் நான்...
ஸ்வீடனில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்ட்ரோட் என்ற வன்முறைக் கும்பலால் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் அந்தச் சிறுவர்கள். டேலன் எனப்படும் போட்டிக் கும்பலைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவரைக் கொல்லும் வேலை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய கெட்ட நேரம், அந்த ராப் பாடகர் இவர்களைக்...
இந்தியாவின் பாரம்பரியச் சின்னமான டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் குண்டு வெடித்துப் பத்து நாள்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாரென்பது இன்னமும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை, அல்லது கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் டெல்லியிலுள்ள பள்ளிகள்...
வரும் இருபத்து நான்காம் தேதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து மூன்றாவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார் சூரியகாந்த். தற்போதைய தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய், இதற்கான பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளார். அடுத்த பதினைந்து மாதங்களுக்குத் தலைமை நீதிபதிப் பதவியில் நீடிப்பார் சூரியகாந்த்...
இயற்பியல், வேதியியலில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலோகக் கரிமச் சட்டக ஆராய்ச்சிகளில் முக்கியப் பங்காற்றிய மூன்று வேதியியலாளர்களுக்கு விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியலிலும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் விருதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். குவாண்டம் ஊடுருவல் ஆராய்ச்சிக்காக...
மொராக்கோ, மடகாஸ்கர், கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஜென் ஸீ இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன. 1996ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களை ஜென் ஸீ தலைமுறையினர் என்கிறார்கள். முழுவதுமாகக் கணினிக் காலத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையினர். இவர்களுக்குச் சமூக ஊடகங்களைத் திறனோடு...
இன்றைக்குக் கிரிக்கெட்டில் நடுவர்களாகச் செயல்பட்டு வருவோர், ஒருமுறையேனும் தங்களது சர்ச்சைக்குரிய தீர்ப்பால் வீரர்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பார்கள். ஆனால் ஒருமுறைகூட அதுபோன்ற புகாரை எதிர்கொள்ளாத ஒரு நடுவரும் இருந்தார். எழுபது, எண்பதுகளின் கிரிக்கெட் ரசிகர்களுடைய மனங்களில் நீங்கா...
‘டிஜிட்டல்மயமாகிவிட்ட இன்றைய உலகம், கடைசிக் காகிதத்தைக் கசக்கி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றே பலரும் எண்ணினார்கள். அந்த அளவுக்குச் சந்தையில் காகிதங்களின் இடத்தைப் பறித்திருந்தது டிஜிட்டல் யுகப் புரட்சி. கணிசமான ஜென் ஸீ இளைஞர்கள் அச்சுப் புத்தகத்திலிருந்து கிண்டிலுக்கு...
பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியைத் திருடியதற்காகக் கைதாகியுள்ளார் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி. இதைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து அவரை நீக்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது கட்சி நிர்வாகம். தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் கிடைக்கும் இதுபோன்ற மகிழ்ச்சிக்குரிய செய்திகளை...














