பிரிக்க முடியாதவை பட்டியலில் தேர்தலும் சுயேச்சை வேட்பாளர்களும் நிச்சயம் இருக்கும். கட்சி சார்பாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, பஞ்சாயத்து எனப் பாரபட்சம் பாராமல் அனைத்துத் தேர்தல்களிலும் இவர்களுடைய பங்கேற்பு உண்டு.
1989ஆம் ஆண்டு தேர்தலில் எழுபத்தைந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிகளைத் தீர்மானிப்பவர்களாக இருந்துள்ளனர். 1996இல் மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
1971ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் பதினேழாயிரம் சுயேச்சை வேட்பாளர்கள் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குச் சென்றவர்கள் முப்பத்திரண்டு பேர் மட்டுமே.















Add Comment