1920ஆம் வருடம். மெட்ராஸ் மாகாணத்தின் முதல் தேர்தல். நிலப்பிரபுக்களும் செல்வந்தர்களும் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் கனஜோராக நடந்து கொண்டிருந்தன. இன்று இருப்பது போல் அரசுப் பள்ளிகளோ மாநகராட்சி கட்டிடங்களோ அப்போது இல்லை.
பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சியும் நீதிக் கட்சியும் போட்டியில் களமிறங்கின. இரு கட்சிகளின் பிரசார யுத்திகளும் மேட்டுக்குடியினரை மையமாகக் கொண்டிருந்தன. மேட்டுக்குடியினரின் ஆதரவைப் பெற்றிருந்தால் போதும், தேர்தலில் வென்று விடலாம். வணிகர்களும் ஜமீன்தார்களும் இரு கட்சிகளுக்கும் பெருமளவில் நிதியளித்தனர். தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். காங்கிரஸ் கட்சி மெட்ராஸ் மாகாணத் தேர்தலைப் புறக்கணித்தது.















Add Comment