Home » ஓட்டுக்குப் பணம்: தோற்கும் ஜனநாயகம்
தமிழ்நாடு

ஓட்டுக்குப் பணம்: தோற்கும் ஜனநாயகம்

தமிழக மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருந்த மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. முடிவுகளைத் தெரிந்துகொள்ள இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டிய நிலை. ஆனாலும் அவரவர் தங்களுக்குத் தோதான கணிப்புகளை வெளியிட்டு இணையவெளியில் அடித்துப் புரளுகின்றனர். கொள்கைகள், கோட்பாடுகள், மக்கள் நலன், எந்தக் கட்சி வந்தால் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என விவாதங்கள் உக்கிரத்துடன் நடைபெறுகின்றன.

ஆனால் நிஜமான பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல். அமைதியாகக் கடந்து விடுகிறோம். நமக்குக் கிடைத்திருக்கிற ‘வாக்கு’ என்னும் அற்புதக் கருவி, எப்படியெல்லாம் மழுங்கடிக்கப்படுகிறது என்கிற பிரச்சனை.

தமிழ்நாட்டில் மட்டும் 1,262 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய தொகையாகத் தெரிந்தாலும், நிஜத்தில் பட்டுவாடா செய்யப்பட்ட தொகையில் சிறிய அளவுதான். சாமானியர்களிடம் கைப்பற்றப்பட்ட பணமும் இதில் கணிசமாக இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!