உலகம் முழுவதும் நாளாந்தம் ஏதோவொரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. வரலாற்றில் மனிதர்கள் பரவலடைந்து வாழத்தொடங்கிய இடங்களிலெல்லாம் அவர்கள் பல காரணங்களுக்காக பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பண்டிகைகள் வேதங்களில் வருகிற ஸ்லோகங்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. மனிதன் இயற்கையோடு இணைந்து காடுகளில் வாழத்தொடங்கிய வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது. முதன்முதலில் அவன் இந்த இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன்னே பயந்து, இது கடவுளாக இருக்குமோ, அல்லது இது கடவுளாக இருக்குமோ என மலைகள், மரங்கள், நீர்நிலைகள், பாம்பு, விலங்குகள், இடி, மின்னல், மழை,நெருப்பு, நிலம், சூரியன், சந்திரன் என தாம் வியந்து கண்டவைகளை, அல்லது தமக்கு அச்சுறுத்தலும், பயத்தையும் தந்தவற்றை வணங்க தொடங்கிய காலம் பண்டிகைகளின் வரலாற்றில் மிக முக்கியமான தொடக்கபுள்ளியாக இருக்க வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















Add Comment