Home » மர்மப் பெண்
கிச்சன் கேபினட்

மர்மப் பெண்

மெக்கால் டைலர்

மார்கரெட் டைலர்

அதிகாரம் மிக்க பெண்கள் இப்படிக் கூட இருப்பார்களா என நாம் ஆச்சரியப்படும் முன், அவர்கள் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தை நினைவில் கொள்ளவேண்டும். அமெரிக்க வரலாற்றில் மிகவும் அடக்கமான மற்றும் பொதுவெளியில் அதிகம் தோன்றாத முதல் பெண்மணிகளில் ஒருவர் மார்கரெட் ‘பெக்கி’ மெக்கால் டைலர் (Margaret Taylor). அமெரிக்காவின் 12ஆவது அதிபரான சக்கரி டைலரின் (Zachary Taylor) மனைவியான இவரது வாழ்க்கை இழப்புகளும் சவால்களும் நிறைந்தது.

மார்கரெட் மெக்கால் சிம்ஸ் 1788ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மேரிலாந்தில் உள்ள கால்வர்ட் கவுண்டியில் (Calvert County) பிறந்தார். இவரது தந்தை வால்டர் ஸ்மித், தாய் ஆன் மெக்கால் ஸ்மித் (Ann Mackall Smith).

தந்தை அமெரிக்கப் புரட்சிப் போரின்போது ஒரு மேஜராகப் பணியாற்றியவர். வசதியான மற்றும் கௌரவமான குடும்பத்தில் பிறந்த மார்கரெட், அக்காலத்து உயர்குடிப் பெண்களுக்குரிய அனைத்துக் கலைகளையும் கற்றார். குறிப்பாக, எம்பிராய்டரி தையல் கலை, இசை, நடனம், வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் அவர் சிறந்து விளங்கினார். வீட்டிலேயே கல்வி கற்றார். ஆனால் உயர் கல்வியை நியூயார்க்கில் முடித்தார். ஆங்கிலம், கணிதம், எம்பிராய்டரி போன்ற கைவேலைகளைக் கற்றுக்கொண்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!