Home » அழியாச்சுடர்
மெட்ரோ கதைகள்

அழியாச்சுடர்

ஒரு பெருமழைக் காலம். மெட்ரோ ரயில் அத்தனை வெறுமையாக இருந்தது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலெல்லாம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை. தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அரசு விடுமுறை எல்லைக்குள் வராமல், வீட்டில் இருந்தே பணிபுரியும் வாய்ப்பும் இல்லாமல், வந்தேயாக வேண்டிய வங்கி ஊழியர்களைப் போலப் பாவப்பட்ட சில பேர் மட்டும் மெட்ரோவைப் பயன்படுத்தினோம்.

மகளிர்ப் பெட்டியில் இருந்து பார்த்தால் எதிர்ப்புற எஞ்ஜின் சுவர் வரை தெரிந்தது. ஏழு பேர் அமரக் கூடிய இருக்கையில்  நான்கு பேர் அமர்ந்திருந்தோம். என்னதான் மெட்ரோவின் அமைதி பழகிவிட்டிருந்தாலும் வெறுமையான பெட்டியும், எல்லோரும் வீட்டில் சுகமாக இருக்க நாம் மட்டும் உழைத்துக் கொட்ட வேண்டியிருக்கிறதே என்னும் எண்ணமும் ஓர் அசௌகரியத்தை உண்டுபண்ணியது.

அந்த அசௌரியத்தைச் சமன் செய்வதுபோல தராசுத் தட்டின் மறுபக்கத்தில் ஒரு சௌந்தர்யம் ஏறி வந்து அமர்ந்து கொண்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!