Home » 24 – எட்டு
24 தொடர்கள்

24 – எட்டு

24

எழுதுகோலின் பட்டுத் திரை

(செய் ஷோனாகன்)

கி.பி. ஆயிரமாவது ஆண்டு. ஜப்பானியப் பேரரசின் தலைநகரான கியோட்டோ நகரம். செர்ரி பூக்களின் நறுமணத்தோடு அதிகாலைப் பொழுது மெல்ல விடிந்தது. பேரரசியின் அந்தரங்க உயர்குடிப் பணிப்பெண்ணின் அறையில் பட்டுத் திரைகள் காற்றில் அசைந்தன. அவர்தான் செய் ஷோனாகன். இயற்கையின் அழகை ரசிப்பதிலும் அதை எழுதுவதிலும் மும்முரமாக இருந்தார்.

அவரது நாட்குறிப்புகள், பழங்கால ஜப்பானிய அரசவையின் அந்தரங்க வாழ்வை ஆவணப்படுத்தின. அவை வரலாற்றின் உன்னதமான காவியமாக மாறின.

செய் ஷோனாகனின் நேர மேலாண்மை எந்தக் கடிகார விதிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. கிழக்கு மலைமுகடுகளில் இளஞ்சிவப்பும் ஊதா நிறமும் கலந்த மேகங்கள் மெல்லப் படரத் தொடங்கின. அவர் படுக்கையை விட்டு விழித்தெழுந்தார். ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அமைதியாக வெளியே நோக்கினார். விடியலின் குளிர்காற்று வீச, செர்ரி மரங்களின் இலைகளில் பனித்துளிகள் வெவ்வேறு வடிவங்களாக உறைந்து கிடந்தன. இயற்கையின் இந்த அசைவுகளைத் தன் மனத்துக்குள் ஒரு புள்ளியில் குவித்து உள்வாங்கத் தொடங்கினார். இந்த அழகியல் சிந்தனையுடனேயே அவரது அன்றாட நாளின் தொடக்கம் அமைந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!