08. கோட் ரெட்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை. வழக்கத்தைவிடப் பரபரப்பாக இருந்தது. அது ஒரு ஜூலை மாதம். சுதந்தர தினக் கொண்டாட்டங்கள் முடிந்து நிம்மதியாக இருக்கவேண்டிய தருணம். ஆனால் நிலைமை விபரீதமாகிக்கொண்டிருந்தது.
காரணம், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம். அதை நோக்கிய தாக்குதல்கள். அத்தளத்தை முடக்க எத்தனித்திருந்தது ஒரு குழு.
வெள்ளை மாளிகையின் சர்வர் முடக்கப்படுவது சாதாரணமான செயல் அல்ல. அப்படி ஒன்று நிகழ்ந்துவிட்டால் உலகத் தொலைக்காட்சிகள் அனைத்தும் பிரேக்கிங் நியூஸ் என்று கதறத் தொடங்கிவிடும்.
வெள்ளை மாளிகையின் இணையத்தளத்தைக் கண்காணிக்க மிகச் சிறந்த வல்லுநர் குழு இருந்தது. அவர்கள் என்ன நடக்கவிருக்கிறது என்று கணித்துவிட்டனர்.
















Add Comment