218. படுகொலை
காலிஸ்தான் என்பது சீக்கிய மத இறையாண்மை அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தைக் கொண்ட, சீக்கியர்களுக்கான ஒரு தனி நாடு. பூகோள ரீதியாக காலிஸ்தான் நிலப்பரப்பு என்ன என்பதில் இதனை லட்சியமாகக் கொண்ட பிரிவினைவாதக் குழுக்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை.
இந்திய மாநிலமான பஞ்சாப்தான் காலிஸ்தான் என்றார்கள் சிலர். இல்லை…இல்லை, இந்தியாவில் உள்ள பஞ்சாப், ஹரியானா, இமாசலப் பிரதேசம், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் என அனைத்தும் இதில் அடங்கும் என்றார்கள் இன்னும் சிலர்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வருவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியபோதே தனி சீக்கிய நாட்டுக்கான கோரிக்கை துவங்கியது. நாற்பதுகளில் காலிஸ்தான், சீக்கிஸ்தான் என்ற பெயர்களில் பிரிவினைக்கான தனிப் பிரசாரம் நடந்தது.
புலம் பெயர்ந்த சீக்கியர்களின் நிதி உதவியோடு பஞ்சாபில் காலிஸ்தான் இயக்கம் 70களிலும், 80களிலும் செழித்து வளர்ந்து, 80களின் பிற்பகுதியில் உச்சத்தை அடைந்தது.
















Add Comment