சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிரேசில் வீரர் நெய்மர். இந்த அறிவிப்பை வெளியிடும்போது நிச்சயம் அவர் மகிழ்ச்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், ‘இந்த மஞ்சள் நிற ஜெர்சிக்காக என் உதிரத்தையும் வாழ்க்கையையும் அளித்தேன். இங்கு ஒரு வரலாற்றையே படைத்தேன். எனினும், இனிமேல் இங்கு தொடர விரும்பவில்லை’ எனத் தெரிவித்திருக்கிறார்.
நெய்மரின் கால்பந்து வாழ்வில், அவரது மிக மோசமான ஃபார்ம் என்பது இப்போது இருப்பதுதான். ஓய்வு பெறவிருக்கிற அந்திம காலத்தில், தனக்கு முதல் வாய்ப்பளித்த சாண்டோஸ் அணியில் மீண்டும் விளையாட முடிவெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில், சமீபத்திய உலகக்கோப்பைத் தொடருக்கு நெய்மர் தேர்ந்தெடுக்கப்பட்டது கால்பந்து ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டாக்கியது. நன்றாக விளையாடக்கூடிய இளம் பிரேசில் வீரர்கள் இருந்தபோதும், நெய்மரைத் தேர்ந்தெடுத்த பயிற்சியாளர் கர்லோ ஆன்சலோட்டியின் முடிவைப் பலரும் விமர்சித்தனர்.
















Add Comment