Home » பொய்யோடு விளையாடு – 13
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 13

கையும் காலுமாகப் பிடிக்கும் கலை

பொய்யரின் முகத்தில் தெரியக்கூடிய நான்-வெர்பல் பொய் காட்டும் தடயங்களைச் சென்ற பகுதிகளில் பார்த்தோம். முகத்தைத் தவிர்த்து, உடலின் மற்ற பாகங்களும் பொய்களைக் காட்டிக்கொடுக்கின்றன. இந்தப் பகுதியில் பொய்யரின் உடல்மொழியை நாம் கவனிக்கப் போகிறோம். பாடி லாங்குவேஜ் என்போமே, அதுதான். இது நம்முடைய பொய்யறியும் திறனை மேலும் கூர்தீட்டிக்கொள்ள உதவும். பொய்யறி வீரருடைய அம்பறாத்தூணியில் இருக்கவேண்டிய மற்றோர் அம்பு இது.

எதிரில் இருப்பவர் ஒரு வார்த்தைகூடப் பேசியிருக்க மாட்டார். ஆனாலும் அவரது உடல்மொழியைக்கொண்டு அவருடைய எண்ணங்களை அறிந்துகொள்ள முடிகிறது இல்லையா? உள்ளுணர்வின் அடிப்படையில் நாம் இதைச் செய்கிறோம். அதையே நுட்பங்கள் அறிந்து செய்யும்போது அது கலையாகிறது. இந்த இயலின் நீள அகலங்கள் பெரிது. நம்முடைய நோக்கம் பொய்யறிதல் மட்டுமே. எனவே, அதனுடன் தொடர்புடைய உடல் மொழிகளை மட்டும் தெரிந்துகொள்வோம்.

பொய்யரின் உடல் அசைவுகள் எப்படி இருக்கும்? அதிகமாகவா, குறைவாகவா? இரண்டில் எது வேண்டுமானாலும் உங்கள் பதிலாக இருக்கலாம். இரண்டுமே சரிதான். சிம்பதெடிக் நெர்வஸ் ரெஸ்பான்ஸ் நிலையில் அசைவுகள் அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு, உட்கார்ந்திருக்கும் நிலையை அட்ஜஸ்ட் செய்வார்கள். கால்களை நகர்த்துவார்கள். விரல்களால் பியானோ வாசிப்பார்கள். கேள்வியைத் தொடுக்கும்போது, எதிரில் இருப்பவர் இம்மூன்றையும் செய்கிறார் என்றால் அவர் பொய் சொல்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!