அர்ஜென்டினா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அர்ஜென்டைன் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கே திண்டாடி வருகின்றனர். அன்றாட உணவுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் அவர்கள் கடன் அட்டைகளை நம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மக்களைக் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளன.
2001ஆம் ஆண்டு. புதிய தாராளமயக் கொள்கைகளின் கீழ் அர்ஜென்டினா பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருந்தது. அப்போது கிர்ச்னர் தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியின் கீழ் 2002-2007 வரை அர்ஜென்டினா குறிப்பிடத்தக்கப் பொருளாதார வளர்ச்சி கண்டது.
2015ஆம் ஆண்டில் மௌரிசியோ மாக்ரியின் கீழ் மீண்டும் புதிய ஆட்சி அமைந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இம்முறை பணவீக்கம் 240% ஆக உயர்ந்தது. 2019இல் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஆட்சிக்கு வந்தார். புதிய வளர்ச்சிவாதத் திட்டங்களை அமல்படுத்தினார். கோவிட் தொற்றும், 2023இல் ஏற்பட்ட கடுமையான வறட்சியும் மீண்டும் பணவீக்கத்தை அதிகப்படுத்தின.
















Add Comment