Home » சக்கரம் – 32
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 32

32 துணை

பெண்ணைவிடப் பெண்ணின் அருகாமையே முக்கியமானது என்று இவனுக்கு எப்போதுமே ஒரு எண்ணம். இவனைப் பொறுத்தவரை நண்பர்கள், தெரிந்தவர்கள் பார்க்கும்படி பெண்களுடன் இருப்பதேகூடப் போதுமானது. கூட இருப்பதையே நெருக்கமாக இருப்பதாக நினைத்து, அசட்டுத்தனமாய்க் கிளுகிளுத்துச் சிரித்தபடி நாலுபேர் விசாரித்தால்கூடப் போதும் என்பதில் நிறைவடைகிறவனாக இருக்கிறோமோ எனவும் அவ்வப்போது தோன்றும்.

காஸனோவா பிம்பம் என ஆதவன் என் பெயர் ராமசேஷனில் பயன்படுத்துகிற வார்த்தையை அடிக்கடி இவனுக்குச் சொல்லிக்கொண்டிருப்பார் ஞாநி. அவர் குரூபி என்பதால், பார்க்கத் தான் நன்றாக இருப்பது பற்றிய மிதப்பை மட்டுப்படுத்தவும் அது குறித்துத் தனக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துவதற்காகவுமே அவர் அதை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவே இவன் எடுத்துக்கொண்டான்.

உண்மையிலேயே காஸினோவா பிம்பத்தைத்தான் நாம் உள்ளூர விரும்புகிறோமோ. மற்றவர்கள் பொறாமைப்படுவதில் கிடைக்கிற நிறைவே போதுமானது என்று இருக்கிறோமோ. பெண்ணுடன் உறவுகொள்வதால் வருகிற இன்பத்தைவிட, அந்த உறவால் வரக்கூடிய சுமைகள், கட்டுகள், பொறுப்புகள், அவற்றுக்கு நம்மை முழுதாகக் கொடுத்தாகவேண்டிய நிர்ப்பந்தம் என, கைக்கட்டு கால்கட்டு எதுவுமின்றி, கூட இருக்கிற பெண்கள் எல்லோருடனும் உறவுகொண்டிருப்பதாய் மற்றவர்கள் நினைத்துக்கொள்வதில்அப்படி அவர்கள் நினைத்துக்கொள்வதாக நாமாக நினைத்துக்கொள்வதில் கிடைக்கிற நிறைவு, உறவுகொள்வதைவிடப் பெரிதாகப்படுகிறதோ. இல்லையென்றால் எங்கும் போகாமல் ரேலிக்கார்கள் யாராவது பார்க்கமாட்டார்களா என இங்கேயே ஏன் இவளுடன் அமர்ந்திருக்கவேண்டும்? நமக்காக இல்லை பார்க்கிற நான்கு பேருக்காக என்று பசப்பிக்கொள்வதுகூட ஈர்ப்பு குறித்த குற்றவுணர்வை மறைத்துக் கொள்வதற்காகத்தானோ.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!