Home » சத் – 7
சத் • தொடர்கள்

சத் – 7

கர்மத்தின் வேர்கள்

ஆசிரமக் குடிலில் யாரும் இல்லை. யாக குண்டத்தின் அருகே இருந்த திண்ணையில் படுத்திருந்தாள் யாஷா. இல்லை… படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.

மெல்லக் கண்கள் திறந்தபோது, பல நாள் போதையில் இருந்த உணர்வில் இருந்தாள் யாஷா. எங்கே இருக்கிறோம், எத்தனை நேரம் போனது என்ற கால தேச உணர்வு அற்று இருந்தாள். நான் என்ற உணர்வு தவிர எதுவும் அறியாது இருந்தாள்.

சூரிய உதயத்துக்குப் பிறகு வரும் இளம் வெப்பம் போல அவளுடைய நினைவுகள் மெல்ல விழித்தெழத் தொடங்கின. நேற்று குடித்த நீரின் தாக்கம் என்பதை உணர்ந்துகொண்டாள். பைராகியைச் சந்தித்த உணர்வு ஒருவித பயத்தைத் தூண்டியது. உடல் தளர்வாகவோ சோர்வாகவோ இல்லை. மிக உற்சாகமாக இருந்தது. பல மணிநேரம் போதையில் இருந்தால் உடல் மிகவும் அதிகமான வலியில் இருக்கும் என உணர்ந்திருந்த யாஷாவுக்கு இந்தப் புத்துணர்வு புதிதாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!