காலம் என்னவோ எந்தவிதத் தடுப்புகளும் பிரிவுகளும் இல்லாமல் வற்றாத நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம், மாதம் வருடம் என்பதெல்லாம் நமக்காக நாம் ஏற்படுத்திய கணக்குதான். நான் தற்காலம் என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த நொடி கடந்த காலமாகி இருக்கும். நான் எதிர்காலமென நினைத்த நொடியில் நுழைந்துவிட்டிருப்பேன்...
Tag - மெட்ராஸ் பேப்பர்
இது 2024-ம் ஆண்டுக்கானக் கட்டுரை என்றாலும் ஒரு பிளாஷ்பேக்குடன் இதனை ஆரம்பிப்பது சரியாக இருக்குமென்றுத்தோன்றுகிறது. பள்ளி, கல்லூரி நாட்களில் எழுதியும், பேசியும் பெற்ற அனுபவங்கள், பரிசுகள் தந்த தைரியத்தில் 1990 களில் ஆரம்பித்து 2000ஆண்டு வரை சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், ஜோக்குகள் ஆகியவற்றை...
2024-க்கு ஒரு நோக்கம் வேண்டாமா?. நாற்பது கட்டுரைகள். ஒரு தொடர், ஒரு புத்தகம் இது தான் எனது தற்போதைய எண்ணம். இதைத் தவிர வாங்கி வைத்துள்ள புத்தகங்கள், குறைந்தது இன்னும் ஐந்து முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து முடிக்க வேண்டும். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் முதல் ஆண்டறிக்கை எழுதியபோது இப்படித்...
மெட்ராஸ் பேப்பரின் தொடக்கம் முதல் இன்று வரை இந்தப் பத்திரிகையின், இது உருவாக்கி அளிக்கும் புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்: நாங்கள் பதிப்பகம் தொடங்கி நடந்த மூன்றாவது புத்தகக் கண்காட்சியில்தான் முதல் முதலாக அவரைப்...
பால கணேஷ், மெட்ராஸ் பேப்பரின் உதவி ஆசிரியர். வெளியாகும் அனைத்துக் கட்டுரைகளையும் முதலில் வாசிப்பவர். அவர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்: “புதிய இதழுக்கு மெட்ராஸ் பேப்பர் என்று பெயர் சூட்டியிருக்கிறேன்” என்று பாரா சொன்ன கணமே பெயர் பிடித்துப் போனது. அதற்கொரு இலச்சினை உருவாக்கும் ஆலோசனைகள்...
மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகள் நலிவுற்றுப் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் ஒரு புதிய இணைய வார இதழை, சந்தா செலுத்தி வாசிக்க வேண்டிய இதழைத் தமிழ் வாசகர்கள்...
2023-ம் வருடம் பிறந்ததும், எனக்குக் கிடைத்த முதல் பரிசு ஆசிரியர் பா.ரா. நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்புகள்தான். மொழியைப் படிக்க, எழுதத்தெரியும் என்ற அடிப்படைத் தகுதியைத்தாண்டி என்னால் முறையாகத் தமிழ் உரைநடையைக் கையாளத்தெரியும் என்ற நம்பிக்கையையும், நுட்பங்களின் வழி அவற்றை மெருகேற்றக்கூடிய நெளிவு...
2023, என் வருடம் என்று நிறைவாக என்னால் சொல்ல முடியும். இப்படி நான் திடமாகச் சொல்ல எனக்கு வழிகாட்டிய என் ஆசிரியர் பா ராகவனின் பங்கு அளப்பரியது. 2022-ஆம் ஆண்டு தளிர், சூஃபி ஆகும் கலை வெளியீடு முடிந்த கையோடு அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டேன் என்றால் நம்புவீர்களா..? 2023-ஆம் ஆண்டுக்காக...
புத்தாண்டுச் சபதங்கள் எடுப்பதில்லை என்ற சபதத்தை எடுத்துக் கொண்டிருந்த என்னை மாற்றியது ‘ஹலோ எப்.எம்.’மின் அலைவரிசையான 106.4. ஏனெனில் அது தான் 2021 ஆரம்பத்தில் எனது உடல் எடை. இதைக் குறைந்தது இரண்டு இலக்கங்களாகவாவது மாற்றி விட வேண்டும் என்பது என் ஒரே நோக்கம். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். டிசம்பர்...
இந்த வருடத்தில் செய்த முதல் உருப்படியான விஷயம், எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது. பதினாறு மணிநேர வகுப்பின் முடிவில் மெட்ராஸ் பேப்பரில் எழுதுவதற்காக ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டது. நன்றாக இருந்த நான்கு கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து பேப்பரில் போட்டார் ஆசிரியர். அதில் என்னுடைய ‘அரபிக் கடலும்...














