Home » பொரியல், கூட்டு, ரசம் – 10
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 10

கருணாநிதி திமுகவும் சோனியா காங்கிரஸும்

1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அதற்குப் பிறகு இருபத்து நான்கு ஆண்டுகள் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை.

1996 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரும் சரிவைச் சந்தித்திருந்தது. நரசிம்மராவ் ஆட்சிப் பொறுப்பிலிருந்தும் கட்சிப் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொண்டார். காங்கிரஸின் அடுத்தகட்டத் தலைவர்கள் சோனியா காந்தியின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பினர்.

அதுவரை தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தாத சோனியா காந்தி, தனது சொந்த வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும், பதினைந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியிலிருந்தது. காங்கிரஸைத் தலைமையேற்று வழிநடத்த சோனியா காந்தி ஒப்புக்கொண்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!