‘இனி உங்கள் சமையல் பாத்திரங்களின் அடியில் கரும்புகை படியாது’ – சமையல் எரிவாயுவில் (LPG) 8% டைமெத்தில் ஈதர் (Dimethyl Ether – DME) கலக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது வழங்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுதான். நவீனத் தொழில்நுட்பம் நம் வீட்டுக்கு ஒரு புதிய ஒளியைக் கொண்டு வரப்போகிறது.
ஆரம்பத்தில், மூன்று கற்களை வைத்து, காய்ந்த மரக்கிளைகளையும் இலைகளையும் மனிதன் எரிபொருளாகப் பயன்படுத்தினான். விறகு அடுப்பில் சமைப்பது என்பது ஒரு போர்க்களப் போராட்டத்துக்குச் சமம். விறகு சரியாக எரியாதபோது எழும் கரும்புகை, கண்களைச் சிவக்க வைக்கும். விறகு அடுப்பில் சமைக்கும்போது ஒரு நாளைக்குச் சுமார் 400 சிகரெட்டுகளைப் பிடிப்பதற்குச் சமமான நச்சுப் புகையை ஒரு கிராமப்புறப் பெண் சுவாசிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தப் புகையினால் ஆஸ்துமா, காசநோய் (TB), கடுமையான நுரையீரல் அழற்சி போன்றவை ஏற்பட்டன. வெறும் சமையல் மட்டுமல்ல, சுட்டெரிக்கும் வெயிலிலும் மழையிலும் மைல் கணக்காக நடந்து சென்று விறகு சுமந்து வருவது அவர்களுடைய உடல்நலத்தையும் வெகுவாகப் பாதித்தது.















Add Comment