கல்யாண வீட்டு வாசலில் இருபக்கமும் வளைந்து, எந்நேரமும் கைகூப்பி நம்மை ராஜ மரியாதையுடன் வரவேற்பவை வாழைக்குலைகள். ராயல் ஃபலூடா என்பதால் அதே ராஜ மரியாதையைக் கொடுப்பதற்காக மூன்று வேஃபர்கள் ஐஸ்கிரீம்களுக்கு முட்டுக்கொடுக்கும்படி செருகப்பட்டிருந்தன.
இதன் விலை அதிகம் என்பதால் எப்படியும் குடும்பத்துக்கே ஒன்று ஆர்டர் செய்வார்கள். நடுத்தர மக்கள் உளவியல் தெரியாமலா உணவகம் நடத்த முடியும்? மேலிருக்கும் மூன்று வகை ஐஸ்கிரீம்களையும் குடும்பத் தலைவர் எப்படியும் பாகப்பிரிவினை செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஐஸ்கிரீமின் எல்லையிலும் இருந்த வேஃபர்கள் அவரது சுமையைக் குறைத்தன.
நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மூன்று எல்லைகள் எப்படிச் சரியாக இருக்கும் என்பது அபத்தமான கேள்வி. ராயல் ஃபலூடாவின் விலையைப் பார்த்தவுடன் குடும்பத்தலைவர் கூடுதலாக இரண்டு மௌத் ஃபிரெஷ்னர்களை கேட்டுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பார்.















Add Comment