எனக்குச் சாப்பிடப் பிடிக்கும், அதனால் சமைக்கவும் பிடிக்கும். பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து இன்ஸ்டாகிராம் ட்ரெண்டில் இருக்கும் உணவுகள் வரை எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்துப் பார்ப்பேன்.
ஆனால் நான் சுவையாகச் சமைப்பது நான் சாப்பிடுவதற்காக மட்டுமே. இதை உறவினர்களும் புரிந்துகொள்வதில்லை, நண்பர்களும். புரிந்துகொள்வதில்லை. ஏதாவது ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வருபவர்கள், சாப்பாட்டு. வேளை வரை பசை போட்டு ஒட்டியது போல என் வீட்டு சோஃபாவை விட்டு நகர்வதே இல்லை.
என் கணவரின் அத்தை ஒருவர் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை என்றால் தவறாமல் வந்து விடுவார். வரும்போது, ‘நான் இங்கே தையல் கடைக்கு வந்தேன். அப்படியே உன்னையும் குழந்தைகளையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். நீ எனக்காக எதுவும் சமைக்க வேண்டாம்’ என்று சொல்லியபடியே சோஃபாவில் அமர்வார். ஆனால் காலை டிஃபனிலிருந்து ஆரம்பித்து மாலை சிற்றுண்டி வரை சாப்பிட்ட பிறகுதான் கிளம்புவார்.
















Add Comment