Home » சக்கரம் – 74
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 74

74 ரோஸ் மில்க் 

 

வண்டி எண் பத்து என்பதால், ஐந்தாவது ஜோடி சைக்கிளாக இருந்த இவனுக்கு மாடியில் அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளும் நடுவே இயந்திரத் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்த ராணுவ வீரரும் தூரத்திலேயே தெரியத் தொடங்கினர். அந்தக் காட்சியே முதுகுத் தண்டை சிலிர்க்கவைப்பதாக இருந்தது. ரேலி, வளாக வாயிலை நெருங்க நெருங்க, அவருக்குக் கீழே முகப்பு வளைவை ஒட்டிய இடப்பக்கச் சுவரில் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்திருந்த அடையாளங்கள் ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் அப்படியே இருந்தன. பயம் நினைவில் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்காகவும் வஞ்சம் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பாலும் வடுக்கள் மறைந்துவிடாதவண்ணம் பதற்றத்துடன் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. 

தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் நாளேடுகளிலும் தொலைதூரத்திலிருந்து காட்சிகளாகவும் செய்திகளாகவும் பார்த்தும் கேட்டுமிருந்த இடத்தை நேரில் பார்க்கிறோம் என்பதே பரவசத்தையும் பயத்தையும் ஒருசேர விளைவிப்பதாய் இருந்தது. அத்தனை சைக்கிள்கள் இரண்டிரண்டாய் நுழைந்த வண்ணமிருப்பது உண்டாக்கிய வியப்பு, தலைப்பாகையும் தாடியுமாய் இருந்த எதிர்ப்பட்ட முகங்களின் சுருக்கங்களில் அப்பட்டமாய் தெரிந்தது. அதுவரை, ஊரூராய் கிடைத்த இன்முக வரவேற்புகளுக்கு முற்றிலும் மாறாக நுழைவில் யாருமில்லாதது வேண்டாத விருந்தாளிகளோ எனக் கலவரத்தை அதிகப்படுத்திற்று. அனைத்தையும்  தூக்கியடிக்கும்விதமாக, பாஸாதி கபாலி தெப்பக் குளங்களுக்கு நடுவே அழுதுவடிய நிற்கும் மண்டபங்களைப்போல இல்லாது, நீருக்கு நடுவே கண்ணைப் பறிக்கும்படி இளவெயிலில் தகதகத்துக்கொண்டிருந்த பொற்கோவில்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!