தேவை ஓர் அடிக்கோடு
பொய் சொல்பவரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் என்ற கேள்விக்குச் சராசரி மக்களிடம் வெவ்வேறு பதில்கள் இருக்கும். படபடப்பு, வியர்த்தல், கண்களைப் பார்க்காமல் பேசுதல் போன்ற பதில்கள் பெரும்பாலும் சொல்லப்படலாம். ஆனால் இதெல்லாம் எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது.
கண்களை வெகுநேரம் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருப்பதும் பொய் சொல்பவருடைய சுபாவம் என்கிறது பொய்யியல். பொய்யறிதலில் அரைகுறை அறிவு மிக ஆபத்தானது என்பதை அடிக்கோடிட்டுக் குறித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்களால் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடலாம்.
கண்களைத் தவிர்த்தல் என்பது சிலருடைய இயல்பான பண்பு. வெட்கம், பதற்றம், அல்லது பயம் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம். அதிகாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளோரின் கண்களைப் பார்த்துப் பேசவும் சிலர் தயங்குகின்றனர். உதாரணத்துக்கு, தன் ஆசிரியருடைய கண்களைப் பார்த்துப் பேசுவது ஒரு சிறுமிக்குக் கடினமானதாக இருக்க வாய்ப்புள்ளது.
அதனால் கண்ணைப் பார்த்துப் பேசாததைப் பொய்க்கான தங்கத் தரநிர்ணயமாக எடுத்துக்கொள்வது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லலாம்.
















Add Comment