மார்த்தா டான்ட்ரிட்ஜ்
பாமன்கி நதிக்கரையின் குளிர்ந்த காற்றும், செஸ்நட் க்ரோவ் புகையிலைத் தோட்டத்தின் பசுமையும் சூழ்ந்த அந்த அழகிய வர்ஜீனியா மாகாணத்தில், 1731 ஜூன் 2ஆம் தேதி ஒரு பெண் குழந்தை தன் முதல் அழுகுரலை ஒலித்தது. ஜான் டான்ட்ரிட்ஜ் – ஃபிரான்சிஸ் ஜோன்ஸ் தம்பதியினர் தங்களுடைய பிஞ்சு மகளுக்கு ‘மார்த்தா டான்ட்ரிட்ஜ்’ என்று அன்போடு பெயரிட்டனர்.
இங்கிலாந்திலிருந்து வந்த தோட்ட உரிமையாளரான தந்தைக்கும், அரசியல்வாதியின் மகளான தாய்க்கும் பிறந்த எட்டு குழந்தைகளில் மார்த்தாவே மூத்தவள். விளையாடித் திரியும் சிறு வயதிலேயே, தன்னைவிட இருபந்து ஐந்து வயது இளையவளான தங்கை உள்பட ஏழு உடன்பிறந்தவர்களையும் ஒரு தாயைப் போல அரவணைக்கும் பொறுப்பு அவளது தோள்களில் விழுந்தது. வீட்டின் நிர்வாகமும், தம்பி தங்கைகளின் பராமரிப்பும் அவளது அன்றாட விதியாக மாறியது.
ஆனால் இந்த இளமைக்காலப் பொறுப்புகள் அவளுக்குள் ஒரு சிறந்த நிர்வாகியைச் செதுக்கிக் கொண்டிருந்தன என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. பின்னாளில் நூற்றுக்கணக்கான அடிமைகளையும், பிரம்மாண்டமான தோட்டங்களையும் ஒற்றைப் பெண்ணாக ஆளப்போகும் ஒரு பேரரசிக்கு அது சிறந்த பயிற்சிக் கூடமாக அமைந்தது.
















Add Comment