எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பான் மீண்டும் ராணுவ ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவுள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு பிரதமர் டகைச்சி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தடை நீக்கத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் ஆயுத ஏற்றுமதியை முழுவதுமாக நிறுத்தியிருந்தது. அரசியலமைப்பு பிரிவு ஒன்பதின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ ஆயுதங்கள், போர் விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை இருந்தது.
1967இல் அப்போதைய பிரதமர் எய்சகு சாட்டோ, கம்யூனிஸ்ட் தேசங்கள், அமெரிக்கா வர்த்தகத் தடை விதித்துள்ள நாடுகள், போர் நடைபெறும் நாடுகள் ஆகியவற்றுக்கு ஆயுத விநியோகம் செய்யமாட்டோம் என்றார். 1976இல் பிரதமர் டேக்யோ மிகி, அனைத்து விதமான ஆயுத ஏற்றுமதியையும் நிறுத்திவைத்தார். அதன் பிறகு பல பத்தாண்டுகளுக்கு அதுவே அந்நாட்டின் அடையாளமாகிப் போனது.















Add Comment