தமிழக வாக்காளர்களில் பதினான்கு சதவீதம், அதாவது எண்பத்து ஏழு லட்சம் பேர் இளைஞர்கள். அவர்களில் இருபத்தொரு லட்சம் வாக்காளர்கள் பதினெட்டு வயது பூர்த்தியடைந்து முதல் முறையாக வாக்களிப்பவர்கள். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் அரசை நிர்ணயிக்கப் போகிறவர்கள். நாட்டை வழிநடத்தப் போகிறவர்கள்.
தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் ஐயாயிரம் முதல் பதினைந்தாயிரம் வாக்குகள் மட்டுமே இருக்கும். அதில் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் முடிவை மாற்றக்கூடியவர்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அதனால்தானோ என்னவோ ஜென் ஸீ தலைமுறையைக் குறிவைத்து மீம் அரசியல், ரீல் அரசியல், இன்ஃப்ளூயன்சர் அரசியல் எனத் தேர்தல் அரசியல் களங்கள் மாறியுள்ளன. அவை முந்தைய தலைமுறையினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஓர் அரசாங்கத்திடம் புதிய வாக்காளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?















Add Comment