Home » நோபல் கனவுகள்
நம் குரல்

நோபல் கனவுகள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் நிறுத்தப்படத்தான் வேண்டும். அதில் சந்தேகமில்லை. ஆனால் அது டிரம்ப்பால்தான் முடியுமா?

அலாஸ்காவில் புதினைச் சந்திக்கிறார். ஆபீசுக்குக் கூப்பிட்டு ஜெலன்ஸ்கியைச் சந்திக்கிறார். சாட்சிக்குச் சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார். புதின்-ஜெலன்ஸ்கி நேரடிச் சந்திப்பு, ரஷ்யா உடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை, உக்ரைனுக்குப் பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து தருவதாக அவர்களிடம் வாக்களிக்கிறார். காஸாவில் இஸ்ரேல் ஓயாமல் நடத்தும் இனப்படுகொலைக்கு ஆயுள் சந்தா ஆதரவாளராக இருந்தாலும் உலக அமைதிக்காக டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் புல்லரிக்கச் செய்பவைதாம். அதிலும் சந்தேகமில்லை.

சென்ற முறை ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்குச் சென்றபோது டிரம்ப்பும் துணை ஜனாதிபதி வான்ஸும் சேர்ந்து அவரை உலகத் தொலைக்காட்சிகளுக்கு முன்னால் அவமதித்த சம்பவம் நடந்தது. ரஷ்யா உடனான போரில் அமெரிக்கா செய்யும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றியுடன் இல்லை என்று இருவரும் வசைபாடினர். அதனை நினைவுகூர்ந்து இந்த முறை டிரம்ப்புக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டே இருந்தார் ஜெலன்ஸ்கி. அவர் மட்டுமா? வந்திருந்த ஐரோப்பியத் தலைவர்களும் டிரம்ப்பைக் குளிர்விக்கும் புகழ் வார்த்தைகளைப் பொதுவெளியில் தாராளமாகப் பயன்படுத்தினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!