Home » நீலமலை ரகசியம் – 7
தொடர்கள் நீலமலை ரகசியம்

நீலமலை ரகசியம் – 7

7. பொற்சாவிகள்

‘மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்களே, நான் அடிவாரத்திலிருக்கிறேன். என் முன்னே விஸ்வரூபமெடுத்துக் காத்திருக்கின்றன நீலமலைகள். திப்பு சுல்தான் காலத்திலிருந்து சமவெளி மனிதர்களின் கால்படாத கன்னி நிலமென அவை காத்திருக்கின்றன. இந்த மலைப்பகுதியைப் பணம் விளையும் பூமியாக மாற்றும் ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன்’

என்று ஆரம்பித்திருந்தது அந்தக் கடிதம். மூன்றாவது வரி வந்ததுமே மன்றோவுக்கு ஆயாசம் வந்தது.

இன்னொரு திட்டம். வெறும் கையால் முழம் போடும் திட்டம். இதற்காக இந்தக் காலையைச் செலவழிக்க வேண்டுமா என்று அவருக்குத் தோன்றியது. ‘பிறகு படிக்க வேண்டிய கடிதங்கள்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த ட்ரேவுக்கு அதைத் தள்ளினார். அங்கேயே அதை விட்டிருந்தால், நீலகிரியின் எதிர்காலம் அப்படியே முடங்கியிருக்கலாம். அல்லது மேலும் பல வருடங்கள் கழித்து யாரேனும் வேறு கவர்னர் கருணை காட்டிச் செயல்படுத்தியுமிருக்கலாம்.

ஆனால் விதி தன் கரங்களை மதராஸ் பட்டினத்தின் கடற்கரைக் காற்று வழியாகச் செலுத்தியது. சற்றுநேரத்திலேயே அவர் ஒதுக்கியிருந்த கடிதம் பறந்து வந்து மீண்டும் அவரின் மேஜையின் மீது விழுந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!