Home » பனிப் புயல் – 36
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 36

36 – தேர்ந்தெடுக்கப்பட்ட உறுமீன்கள்

ஃபெலிக்ஸ் ஸெர்ரின்ஸ்கி கேஜிபி பயிற்சி மையம்,
மாஸ்கோ.
1979.

கேஜிபியின் செயல்பாடுகளை வெளிநாட்டிலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டது. வலோத்யாவும் இதில் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டார். GRU என்றழைக்கப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறையின் முதல் தலைவராக இருந்தவர் யான் பெரீஸின். ரிச்சர்ட் சார்ஜ், மேன்ஃபிரெட் ஸ்டெர்ன் போன்ற புகழ்பெற்ற உளவாளிகளை உருவாக்கியவர். தற்செயலாக இவரது புகைப்படத்தைத் தனது அறையில் மாட்டியிருந்த வலோத்யாவுக்கு அவரே மானசீக குருவானார்.

சோவியத்துக்குள் நுழையும் வெளிநாட்டினரைக் கண்காணிப்பது வலோத்யாவின் பணி. அவர்களில் யார் கேஜிபியுடன் தகவல்களைப் பகிர்வார்கள் என்பதை ஊகித்து அணுக வேண்டும். வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளே முதல் இலக்கு. ராணுவ வட்டாரத் தகவல்கள், உயர்மட்ட அரசியல் முடிவுகள் எனப் பிற நாடுகளின் ரகசியங்களைத் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பவர்கள். இவையே சோவியத்தின் அடுத்த நகர்வுகளுக்கு உதவுபவை.

அடுத்த இலக்கு, நாட்டின் பொருளாதாரப் போக்கை நிர்ணயிக்கும் வர்த்தகர்கள். அடிக்கடிப் பயணம் செய்தாலும் சந்தேகப்பட முடியாதவர்கள். சோவியத்தில் படிப்பதற்காக வரும் மாணவர்களையும் வளைத்துப்போடுவதில் வல்லவர்கள் கேஜிபி அதிகாரிகள். வருங்காலத்தில் பெரிய பதவிகள் வகிக்கப்போகிறவர்கள் மீதான நிகழ்கால முதலீடு. இன்னும் கலாசாரம், விஞ்ஞானம் போன்ற துறைகளின் வெளிநாட்டுப் பிரமுகர்களும் சந்தேகம் வராமல் உளவுபார்க்க முடிகிறவர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!