194. பெல்சி சாகசப் பயணம்
இந்திரா காந்தி ஆட்சியின்போது, புபுல் ஜெயகர் அகில இந்தியக் கைவினைக் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்தார். ஆட்சி இழந்தவுடன் அவர் தன் பொறுப்பிலிருந்து விலக விரும்பி, தனது ராஜினாமா கடிதத்தை ஜனதா அரசுக்கு அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மொரார்ஜி தேசாய், புபுல் ஜெயகரைச் சந்திக்க நேரம் அளித்தார்.
அதற்கு முன்பாக புபுல் இந்திரா காந்தியைச் சந்தித்தார். புபுல் வழியாக இந்திரா காந்தி மொரார்ஜி தேசாய்க்கு சில தகவல்களைத் தெரிவிக்க விரும்பினார். அவற்றைக் குறிப்புகளாக எழுதி புபுலிடம் கொடுத்தார். புபுல் ஜெயகர் மொரார்ஜியை சந்திக்கும்போது அவரிடம் இந்திரா காந்தியின் கருத்துகளாக என்னென்ன விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.
இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்தி குறித்து உலா வரும் பல தகவல்கள் சற்றும் உண்மையானவை இல்லை; அரசியலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக விரும்புகிறார் இந்திரா காந்தி. காங்கிரஸ் கட்சித் தலைவர், ஜனாதிபதி என எந்தப் பதவியையும் ஏற்பதில் அவருக்கு ஆர்வமில்லை; இவை எல்லாம் அதில் முக்கியமான அம்சங்கள்.
















Add Comment