கண்ணாடி வீட்டு வாழ்க்கை
ரப்பர் போலத் தன் உடலை வளைக்கும் திறனுடையவர் அலினா கபாயேவா. நான்கு வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக்கொண்டார். 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். உலகளவில் பதினான்கு சாம்பியன்ஷிப் பதக்கங்கள், ஐரோப்பியப் போட்டிகளில் இருபத்தியொரு பதக்கங்கள் என அள்ளிக் குவித்தார்.
குட்டிக்கரணம் அடிக்கத் தயாராவது போல இரு கைகளையும் கீழிருக்கும் பந்தின் மீது ஊன்ற வேண்டும். உடலைக் கீழ்நோக்கி வளைத்தபடியே ஒரு காலைக் கீழே ஊன்றி, இன்னொரு காலை அதன் நேர்க்கோட்டில் மேலே தூக்கி நிற்க வேண்டும். பிறகு ஒரு கையால் பந்தை எடுத்து எதிர்புறம் நீட்டிப் பிடிக்க வேண்டும்.
இன்னொரு கையையும் தரையிலிருந்து விடுவித்து, ஒற்றைக் காலால் முழு உடலையும் தாங்கி நின்றபடியே சிரித்து போஸ் கொடுக்க வேண்டும். இதுவே கபாயேவாவின் பிரத்தியேக ஸ்டைல். கபாயேவா என்று அவரது பெயராலேயே இந்த போஸ் அறியப்படுகிறது. இதை விளக்குவதைப்போல முயற்சி செய்வதும் கடினம்.















Add Comment