56 ஏற்றமும் இறக்கமும்
சைக்கிளோட்டிகளுக்கு மிகப்பெரிய சவால் என்று சுதீர் சொல்லிக்கொண்டிருந்த கஸாரா காட் இகத்புரிக்கு முன்னால் வந்தேவிட்டது. சாலை பார்க்கவே மிரட்டலாகத்தான் இருந்தது. ஏறக்குறைய எல்லோரையுமே இறங்கித் தள்ளிக்கொண்டு போகவிட்டிருந்தது.
துரைசாமி சப்வேயில் இதே BSA SLRல் ஜெயகாந்தனை வைத்துக்கொண்டு ஏறிய நமக்குமா முடியாமல் போய்விடும் என்பதை சோதித்துப் பார்த்திருக்கக்கூடிய, முடியும் என்று நமக்கு நாமே நிரூபித்துக்கொண்டிருக்கக்கூடிய நல்ல வாய்ப்பு மாடாவில் இருந்த அந்தப் பாழாய்ப்போன பள்ளத்தால் வீணாய்ப்போனதே என்று துக்கம் முட்டிக்கொண்டு வந்தது.















Add Comment