Home » இலங்கை திரும்பும் அகதிகள்
உலகம்

இலங்கை திரும்பும் அகதிகள்

இலங்கையில் யுத்தம் ஆரம்பித்தபோதே அகதிகள் பிரச்சினையும் தோன்றிவிட்டது. முதலில் அண்டைய நாடான இந்தியாவை நோக்கித்தான் பெரும்பாலானோரும் சென்றார்கள். படகிலும், இன்னபிற மூலமும் தமிழகத்தின் கரையோரத்தைச் சென்றடைவது மிக இலகுவாக இருந்ததே இதன் காரணம். அது மட்டும் கிடையாது. நீண்டகாலமாக இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் ஆழமான பிணைப்பும் உண்டு.

வர்த்தகம், திருமணம், சுற்றுலா என்று இந்தப் பிணைப்பு பரந்துபட்டது. இதனால் தமக்கு ஒரு பிரச்சினை என்றதும் ஈழத் தமிழ் மக்கள் அண்டை வீடுகளையே தேடி ஓடினர். இன்னும் சிலர் கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். அவர்களுக்குப் பல சவால்களுக்குப் பின்னர் குடியுரிமை கிடைத்தது. அதனால் அவர்கள் நல்ல நிலைமைக்கு வரவும் முடிந்தது. அவர்களுக்குத் தமது எஞ்சிய குடும்பத்தினரைச் சட்ட ரீதியாகவே அந்த நாடுகளுக்கு வரவழைத்துக் கொள்ளவும் முடிந்தது.

ஆனால் தமது நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க இந்தியாவால் இயலவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கைக்கு எவராலும் தீர்க்கமான பதிலை வழங்கவும் முடியவில்லை. எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்பதாக இருக்கலாம். அண்டை நாட்டு விவகாரம் என்பதால் பகைத்துக் கொள்ள முடியாத நிலைமை காரணமாக இருக்கலாம். விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம். எதுவாயினும் கோரிக்கை நிறைவேறவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!