‘உலகத்துல எனக்குப் பிடிக்காத ஒரே டிஃபன் உப்புமா’ என்பது ஜென் ஸீ பிள்ளைகளின் டயலாக். அடுத்த வேளை சோறு முக்கியம் என்பதால் பூமர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனதார ஒப்புக்கொள்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இதனாலேயே இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி, கார்ன் ஃப்ளேக்ஸ்...
Tag - உணவு
கொழுகொழுவென இருப்பதால் கொழுக்கட்டை என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். மொழுமொழுவென இருப்பதால் திபெத்தியர்கள் அதற்கு மோமோ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும். ஆவியில் அவித்த பண்டங்களை திபெத்திய மொழியில் மோமோ என்றே அழைப்பார்கள். பாட்டிமார்கள் சிறுகச்சிறுக காசை சேர்த்து வைக்கும் சுருக்குப்பை...
கும்பகர்ணன் ராமரை விழுங்க வாயைப் பிளந்தது போல நாமும் பர்கரை உண்ண வாய் திறப்போம். அப்படியும் ஒருபக்கம் கடிக்கும்போது மறுபக்கம் பிதுங்கி வெளியே நிற்கும். நாம் பர்கரின் சுவையில் மூழ்கியிருக்கும்போது அந்த நிலச்சரிவு ஏற்படும். நடுவில் வைத்திருந்த வெங்காயம் முதற்கொண்டு ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து, வெறுமனே...
தெருவுக்குத் தெரு டீக்கடைகளாலான இந்தியா இப்போது பானி பூரிக் கடைகளால் நிறைந்திருக்கிறது. ஒரே மொழி, ஒரே தேர்தலுக்கெல்லாம் முன்னரே இந்தியர்கள் பானி பூரியின் சுவையில் ஒன்றிணைந்து விட்டோம். இப்படிப்பட்ட பானி பூரியின் மகத்துவத்தை அறிந்துகொள்வது முக்கியமல்லவா? ‘ஏக் பிளேட் பானி பூரி பையா’ என்று...
முக்கோணத்தில் ஒரு கோணத்தின் மொறுமொறுவென இருக்கும் மேல்பகுதியைக் கடித்தவுடன் உள்ளிருக்கும் ஆவி வெளியேறுவதைப் பார்ப்பீர்கள். சப்பாத்தியை உப்பு வத்தலாகப் போட்டது போன்றதொரு சுவை நாக்கில் தெரியும்.
மசாலா சேர்த்து அடுக்கி வைத்த கோழித் துண்டங்கள் மீது அனல் பட்டு வெந்த பகுதியை மட்டும் நீண்ட கத்தி கொண்டு வெட்டித்தள்ளுவார்கள். கீழே தட்டில் அவை விழுந்ததும் கொஞ்சம் முட்டைக்கோஸ் சேர்த்துத் தாராளமாகச் சில கரண்டிகள் மயோனைஸ் சேர்த்துக் கலக்குவார்கள். அதை ரொட்டியில் மடித்துக் கொடுப்பதுதான் சவர்மா. ஃபுட்...
நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பட்டியல் கவனம் ஈர்க்கிறது. சைவ மட்டன் குழம்பு, சைவ சிக்கன் 65, சைவ மீன் வறுவல், சைவ இறால், சைவ குடல் குழம்பு என்றெல்லாம் உணவு வகைகளைப் பார்க்க நேரிடுகிறது. முதன்முதலாக இதனைப் பார்த்தபோது...
சென்னை உணவுத் திருவிழா டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்குபெற்ற முதல் நிகழ்ச்சி இது. என்னென்ன உணவுகள் இருந்தன? ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டிருந்தன? என்பதை...
இலேசான புளிப்பும், அளவான தித்திப்பும் முறுக்கு போல நறுக்கெனக் கடிபடும் தன்மையும் கொண்ட பண்டம் ஜிலேபி. மத்தியப் பிரதேசத்தின் காலை உணவில் ஜிலேபிக்கும் இடமுண்டு. தில்லியில் விற்கப்படும் பிரபலமான சாலை உணவு. திருமலை திருப்பதி கோயிலில் ஜிலேபியைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் எனச் சொன்னாலும் நம்பிவிடுவோம்...
ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் வரிசைகட்டும் என்கிற நாசாவின் அறிவிப்பு கூட அவ்வப்போது வரும். ஆனால் எங்கள் வீட்டில் மூவரின் விடுமுறை நாள்களும் ஒன்றாக அமைவது அரிதினும் அரிது. அப்படி அரிதாகக் கிடைத்த விடுமுறையை இந்த வருடம் பாரீஸில் கொண்டாடினோம். திகட்டத் திகட்ட பிரெஞ்சுப் புரட்சியையும்...













