குக்கர் பிரியாணி தொடங்கி விறகடுப்பு பிரியாணி, மூங்கில் பிரியாணி வரை சாப்பிட்டுப் பார்த்துள்ளோம். இதற்கெல்லாம் சவால் விடும் விதமாக, ‘என்னது, நீங்க இன்னும் மந்தி பிரியாணி சாப்பிட்டதில்லையா?’ எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள் ஜென் ஸீ உணவுப் பிரியர்கள். இது நமது ருசிஞர் படைக்கே வந்த அவமானம்...
Tag - உணவு
இன்றைய நாளில் லண்டன் மாநகரின் எப்பகுதிக்குப் போனாலும் காணக்கூடியவை இந்திய உணவகங்கள். இந்தியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒரே தெருவில் பலவகையான இந்திய உணவகங்களைக் காணலாம். இந்த உணவகங்களின் வாடிக்கையாளர்கள் இந்திய வம்சாவளியினர் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களுக்கும் இந்திய உணவு மிகவும் பிடிக்கும்...
ஒருமுறை ஏழு நாள்கள் அரிசி சாதத்தைக் கண்ணால் கூடப் பார்க்கக் கூடாத ஜிஎம் டயட்டை ஆரம்பித்தேன். அன்றிரவு பிரியாணியுடன் அதை முடித்து வைத்தேன். காலை ஒருநேர உபவாசம் இருந்தாலும் இதுவே என் நிலைமை. எனக்கு சாத்வீகத்தை அறிமுகப்படுத்தியவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தோழி. நாள் முழுக்க இருந்த விரதத்தை அவர் போஹா...
‘காதல் பொய்யென்று சொன்னேன் உன்னைக் காணும்வரை. கச்சோரி கொடிதென்று சொன்னேன் ராஜ் கச்சோரி உண்ணும்வரை.’ எனக்குத் தெரிந்த கச்சோரிகள், லட்டுக்களின் அளவில் கடிக்கவே சிரமப்படுத்தும் ஒரு வஸ்துவாக இருந்தன. கடித்தபின் உள்ளிருக்கும் பூரணமாவது நம்மை சாந்தப்படுத்த வேண்டும். அதுவும் இல்லை. காரம்...
ஆற்றில் குளித்துவிட்டுக் கரை ஏறும்போது ஏதோவொன்று தலை மீது பட்டுக் கீழே விழுந்தது. அதன் பழுப்பு நிற ஓடு வெடித்து உள்ளிருக்கும் புளி தெரிந்தது. மகள் முகர்ந்து பார்க்கக் கையில் எடுத்தாள். கண்களும் மூக்கும் ஒரே நேரத்தில் மூளைக்குச் சமிக்ஞை அனுப்ப நாக்கில் எச்சில் ஊறியது. தயிர் சாதப் பிரியர்களையும்...
இந்தப் பொழப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சுது. இந்த ஒரு வரியை நமது ருசிஞர் படையின் வேதமாகக் கொண்டு இந்த உணவுக் கட்டுரைகளை அணுகுவோம். காய்ச்சலுக்கு வெறும் ரொட்டியைச் சாப்பிட்ட பாவப்பட்ட தலைமுறைகள் உண்டு. அந்த ரொட்டியை உருமாற்றி, பாவ் என்ற பெயரில் காலை உணவாக உண்ணும் பழக்கமுடையவர்கள்...
அமெரிக்கக் கடைகளில் மலைபோலக் குவித்து வைத்திருந்தாலும், அருகில் சென்றால் கூட எலுமிச்சைப் பழங்களில் இருந்து ஏனோ மணம் வீசுவதில்லை. சப்ஜி மண்டி போன்ற இந்தியக் கடைகளுக்குச் சென்றாலும் இதே நிலைதான். ஹூஸ்டனில் என் தம்பி வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதில் இலைகள் தெரியாமல் நிறைய காய்த்து...
எப்போதும் செட்டிநாடு, மலபார், அமராவதி உணவகங்கள் என்றால் பயப்படாமல் சரியென்பேன். சாதமோ டிஃபனோ, அதோடு குழம்பை ஊற்றிக் குழைத்துப் பசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை. காய்ந்துபோன ரொட்டி, ஃபிரைட் ரைஸை மெல்லும் அளவுக்கு எனக்குப் பயில்வான் பற்கள் கிடையாது. வாய்க்குள் நெருப்பை விழுங்கி வித்தை...
ஆறுமாதக் குழந்தையின் பிஞ்சு உள்ளங்கையைப் போல மென்மையானது அந்த வெள்ளை உருண்டை. ஓர் உழைப்பாளியின் பதினைந்து நிமிடத்தை மைதா மாவில் குவித்த பின் கிடைப்பது. இதற்குப்பின் ஒரு கலைஞரின் கைப்பட்டு இது பரோட்டாவாக மாறுவது ஒரு கண்கட்டி வித்தை. அந்த மென்மையைக் கையாள, எண்ணெய்யில் தனது கைகளை நனைத்துக் கொள்வார்...
‘உலகத்துல எனக்குப் பிடிக்காத ஒரே டிஃபன் உப்புமா’ என்பது ஜென் ஸீ பிள்ளைகளின் டயலாக். அடுத்த வேளை சோறு முக்கியம் என்பதால் பூமர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் மனதார ஒப்புக்கொள்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இதனாலேயே இரண்டு நிமிடங்களில் தயாராகும் மேகி, கார்ன் ஃப்ளேக்ஸ்...














