ஹெலிகாப்டர்கள் முதலில் சுற்றி வரும். போராளிகளைத் தேடும். குடியிருப்புகளை நோட்டமிடும். எங்கும் நடமாட்டம் இல்லாதிருக்கும் சூழ்நிலையில் சற்றுத் தாழப் பறந்து வரும். அப்போது சுட்டு வீழ்த்திவிடலாம். இது திட்டம். ஆனால்...
Tag - பலூசிஸ்தான்
மாநிலத்தின் அனைத்து எல்லைகளில் இருந்தும் உள்ளே வருவதற்கு இருந்த அத்தனை சாலை வழிகளையும் அவர்கள் தகர்த்தார்கள். ராணுவ வாகனங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள் போன்றவை உள்ளே நுழையவே முடியாது.
உதவிக்கு இருக்கட்டும் என்று காசு கொடுத்துக்கூட ஒரு பலூச்சியை விலைக்கு வாங்கி உடன் வைத்துக்கொள்ள முடியாது. காசுக்குப் பணியாத குணம் கொண்டவர்கள் பலூச்சிகள்.
இரானின் எல்லைக்கு உட்பட்ட பலூசிஸ்தான் பகுதியில் இருந்த புரட்சிகர இயக்கங்களுக்காக இராக் அனுப்ப வைத்திருந்த ஆயுதங்களே அவை. அதற்கும் பாக். பலூச்சி இயக்கங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
பங்களாதேஷின் உதயம், பலூசிஸ்தான் என்கிற இன்னொரு புதிய நாட்டின் உதயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருக்கும் என்று பாகிஸ்தானில் வசித்த ஒவ்வொருவரும் அஞ்சினார்கள்.
புட்டோ இப்படி ஒரு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தபோது, பலூசிஸ்தானில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தவர்கள் அனைத்துக்கும் மங்களம் பாடும் விதமாக வேறொரு காரியம் செய்து வைத்தார்கள்.
பலூசிஸ்தானில் தாற்காலிகமாக அமைதி போன்ற ஒன்று நிலவ ஆரம்பித்தது. ஷெர் முஹம்மது மர்ரி, பாகிஸ்தான் இலக்குகள் மீதான தாக்குதல்களை நிறுத்திக்கொண்டார்.
பாகிஸ்தான் அரசால் மறைக்கப்படும் உண்மைகளைப் பாகிஸ்தானிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பத்திரிகை பலூச்சி மற்றும் உர்தூ மொழிகளில் அச்சிடப்பட்டது.
ஷெர் முஹம்மது மர்ரிக்கு ஆப்கனிஸ்தானை ஆண்டுகொண்டிருந்த இடது சாரி அரசுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்புகளின் மூலம் அவருக்கு சோவியத் யூனியனுடனும் நேரடித் தொடர்பு சாத்தியமாகியிருந்தது.
1962 முதல் 1969 வரையிலான காலக்கட்டத்தில் ஷெர் முஹம்மது மர்ரியின் பராவி இயக்கம் பலூசிஸ்தானில் நிலைகொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்தது.













