‘மூன்றாவது முறையாகத் தலைமைப் பொறுப்பைத் தொடர விரும்பவில்லை’ என்று அறிவித்திருக்கிறார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சேர்மன் சந்திரசேகரன். ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி டாடா குழுமத்தினருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், வரும் பிப்ரவரி மாதத்தோடு தன்னுடைய பதவிக் காலம் முடிவதால், நிர்வாகம் அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவர் இதை அறிவித்ததும் டாடா பங்குகளின் மதிப்பு சந்தையில் சரியத் தொடங்கியது.
டாடாவின் தலைமை மாற்றம் எப்போதும் நாட்டின் கவனத்தைக் கோரும் விஷயம்தான். சென்ற முறை மிஸ்த்ரி விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இம்முறை அறிக்கைகளோடு அமைதியாக வேலைகள் நடக்கின்றன. ஆனால் நிர்வாகத்துக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இல்லை.
நடராஜன் சந்திரசேகரன், 2017ஆம் ஆண்டு டாடா சன்ஸின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். ரத்தன் டாடாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்ஸி அல்லாத தலைவர் சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். டிசிஎஸ் நிறுவனத்தில் 1987ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கி, இன்றைய தேதிக்குச் சுமார் நாற்பது ஆண்டுகாலமாக அந்நிறுவனத்தின் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
















Add Comment