பேப்பரைத் திறந்தாலே கொலைச் செய்தி. மாமியாருக்குக் கத்திக் குத்து. மாமனாரைக் கொன்று ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைத்த மருமகள் கைது. நடுத்தெருவுக்கு வந்த நாத்தனார் சண்டை. உலக்கையால் மண்டையில் போட்டு, சாக்குப் பையில் அடைத்து கூட்ஸ் ரயிலில் வீசிய துணிகரம்.
பார்க்கிறோம் அல்லவா? மாமியார் குடும்பத்தாருடன் பெண்களுக்கு எப்போதும் பிரச்னை. மாமியாரும் ஒரு பெண் என்றாலும் பெண் குலத்திலேயே அவர் ஒரு தனி இனம், தனி ரகமாகத்தான் எப்போதும் இருக்கிறார். இதனால்தான் வாழப் போகும் வனிதாமணிகளுக்கு வகைவகையான பிரச்னைகள். எந்த அரசாங்கமாவது இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கிறதா? நடவடிக்கை என்றால் கைதல்ல. ஒரு நிரந்தரத் தீர்வு.
















Add Comment