Home » ஒரு பிரபஞ்சப் பெரும்பிழை
நகைச்சுவை

ஒரு பிரபஞ்சப் பெரும்பிழை

இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் பல  அதிக நேரம் நினைவில்  நிற்பதே இல்லை. ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் கொத்தமல்லி இலைகளைப் போல மிக வேகமாக என் மனதிலிருந்து மறைந்து போய்விடுகின்றன.

நடிகர்கள் வீட்டில் நடக்கும் சண்டைகள், தேர்தல் பிரசார வாக்குறுதிகள், ஜிக்-சாக்கில் ஏறியிறங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலை போன்றவையெல்லாம் நான் அடுத்த சிப் காபி குடிக்க ஆரம்பிக்கும்போதே  மறந்து விடுகின்றன.

தங்கம் விலை உயர்வு, நிலநடுக்கம், நாடுகளுக்கு இடையே உருவாகும் சச்சரவுகள், புயல்களால் நடந்த பேரழிவுகள் போன்ற ஒரு சில செய்திகள் மட்டுமே சாஸ், ஊறுகாய் போல என்  மனதில் நிலைக்கும்.

ஆனால் அந்த முக்கியச் செய்திகளை விடவும், வருடத்துக்கு ஒருமுறை என்னை உலுக்கும் செய்தி ஒன்று உண்டு. புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு நவம்பர் மாதமே நம்மைப் பதற வைக்கும் அந்தச் செய்தி வந்து விடும். என்னை மட்டுமல்ல, குடும்பத் தலைவி, தலைவர், ஆசிரியர், ஐடி ஊழியர், ஏன் பள்ளி மாணவரைக் கூடத் திடீரென்று முழுக் கவனத்துடன் நிமிர்ந்து உட்கார வைத்துவிடும்.

இல்லை, நீங்கள் நினைத்த எந்தச் செய்தியும் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!