கடந்த மார்ச் 30ஆம் தேதி, வாஷிங்டன் டிசி வாசிகளுக்கு ‘A Throne Fit for a King’ என்று தலைப்பிடப்பட்ட திடீர் சிற்பம் ஒன்று காணக் கிடைத்தது. அழகிய தங்க நிற வேலைப்பாடுகளுடன், பத்தடி உயரம் கொண்ட அரியணைச் சிற்பம் அது. பளிங்கினால் செய்யப்பட்டது போன்ற தோற்றம் கொண்டது. அதன் மத்தியில் முற்றிலும் தங்க நிறத்தாலான கழிப்பறையுடன் காட்சியளித்தது. மிகுந்த ஆர்வத்துடன் பலரும் சிரித்தபடி அதன் மீதமர்ந்து மகிழ்ந்தனர்.
வெள்ளை மாளிகையைத் தனது ரசனைக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பது அதிபர் டிரம்ப்பின் ஆசை. அதற்காகத் தனியாரிடமிருந்து முந்நூறு மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளார். அவர் மிகவும் விரும்பும் தங்க நிறத்தைக் கொண்டு மிகையலங்காரம் செய்யப்படுகிறது வெள்ளை மாளிகை.
சென்ற ஆண்டு, அமெரிக்க அரசு மிக நீண்ட நிதி முடக்கத்தால் தவித்தது. அந்நிலையிலும் வெள்ளை மாளிகையின் கழிவறை ஒன்று பளிங்கும் தங்க நிறமும் கொண்டு புதுப்பிக்கப்பட்டதை மிகப் பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தார் அதிபர் டிரம்ப். அதைப் பகடி செய்யும் பொருட்டே இந்த அரியணைக் கழிப்பறைச் சிற்பம்.















Add Comment