Home » மால்வேர் குடும்பத்தார் – 7
நாள்தோறும் மால்வேர்

மால்வேர் குடும்பத்தார் – 7

07. காதல் கடிதம் தீட்டவே

மெலிசாவின் ஆயுதம் காமம். அவ்வலையில் லட்சக்கணக்கானோர் வீழ்ந்தனர். அதனினும் அதிக நபர்களை வீழ்த்திய மற்றுமோர் மால்வேர் உண்டு. அதன் பெயர் ILOVEYOU வைரஸ். மால்வேர் குடும்பத்தின் ரோமியோ இவர்.

ஃபிலிப்பைன்ஸ். மணிலா நகரம். இங்கிருந்துதான் காதலின் தீபம் ஏற்றப்பட்டது. தீபம் அல்ல, பெருந்தீ. கட்டுக்கடங்காத காட்டுத்தீ.

இக்கதையின் நாயகர்கள் இருவர். கணினி மாணவர்கள். பெயர் சொன்னாலும் நினைவில் நிற்கப்போவதில்லை. அதற்காக X மற்றும் Y என்று சொல்ல முடியாதல்லவா?

முதல் நபர் அனெல் டி குஸ்மேன் (Onel de Guzman). அவருடைய கூட்டாளி ரியோனல் ரமோனெஸ் (Reonel Ramones). புரொகிராமிங் துறையில் ஆர்வமிக்கவர்கள். இருவருக்கும் அப்போது இருபத்து நான்கு வயது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!