112. தவம்
குடிசைக்கு வெளியே இருந்த ஒரு வேம்பினடியில் கருவூரார் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்புறம் சார்வாகன் இருந்தான். சித்தர் வரச் சொல்லி உதுமானி நாயனாரும் அவரது மாணாக்கர்களான அபுதுவும் காளத்தியும் அப்புலர் காலைப் பொழுதில் சார்வாகனின் குடிசைக்கு வந்திருந்தார்கள். சர்ப்பமாகவோ பட்சியாகவோ அல்லாமல் அவர்கள் இருவரும் தத்தமது சுய உருவத்தில் ஒன்றாக வந்ததைக் கண்டு சார்வாகன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.
எப்போதும் இப்படியே இருங்கள். மனிதப் பிறவி வாய்த்த பிறகும் பட்சியாகவும் சர்ப்பமாகவும் திரிந்துகொண்டிருப்பது ஓர் அவலமென்பதை உணருங்கள் என்று சார்வாகன் அவர்களிடம் சொன்னான்.
உருவில் ஒன்றுமில்லை சார்வாகனே. நாம் தண்ணீரை நிகர்த்து இருக்கிறோமா என்பதில் மட்டும் கவனமாயிருந்தால் போதும். ஏந்தும் கலயம் வடிவத்தைக் கொடுத்து, எடுத்துக்கொள்ளும்,
என்று உதுமானி நாயனார் சொன்னார்.
















Add Comment